Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

குறித்த நேரத்தில் வேலையைச் செய்க!

ADDED : ஜூலை 30, 2008 05:54 PM

Google News
Latest Tamil News

* நாம் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்ப டைத்து விட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நம்முள் ஊற்றுவான். இறைவனுடன் ஒன்றாகி விடுவதன் மூலம் எல்லாப் பொருள்களிலுமுள்ள எல்லையற்ற ஆனந்தத்தைச் சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டும் இல்லை. வேறு எத்தனையோ இன்பங்கள் அவனிடத்தில் உள்ளன. சாந்திக்காக, முக்திக்காக, ஞானத்திற்காக, ஆற்றலுக்காக இறைவனை நாடலாம்.
* எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ, அந்த அளவுக்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு பக்கபலமாகத் துணை நிற்கும். நம் தன்னம்பிக்கைக் கும், சுயஆற்றலுக்கும் பின்னால் தெய்வ சக்தி இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* குழந்தைக்கு நாம் கொடுக்கும் பொருளின் மதிப்பு தெரியாததைப் போல இறைவனிடமிருந்து நாம் பெறுவதின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அதனால் மனிதனால் கடவுளிடம் நன்றியறிதலுடன் இருக்க முடிவதில்லை.
* குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்வது என்பது பெரிய சக்தியாகும். அதனால் நமது நேரமும், செயல்பாடுகளும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

Our Apps Available On

Dinamalar

Follow us